விஜய்யின் முதல் பட ஹீரோயின்!! கடைசி படத்தில் எந்த ரோல் கிடைத்தாலும் ஓகே!! நடிகை ஓபன் டாக்..
நடிகை சுவாதி
90களில் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை சுவாதி. 1995ல் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தேவா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் சுவாதி.

அதன்பின் அஜித்தின் வான்மதி படத்தில் நடித்து, வசந்த வாசல், செல்வா, நாட்டுப்புற நாயகன், சொக்கத்தங்கம், யோகி போன்ற படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.
தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் நடித்த வானதி வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கெளசல்யா நடித்த ரோலில் நடித்தார். இதன்பின் சினிமாவில் இருந்து விலகினார் சுவாதி.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சொக்கத் தங்கம் படத்தில் பிரகாஷ் ராஜின் தங்கையாக நடித்திருபேன், தெலுங்கு, கன்னட படங்களில் நான் நடித்துள்ளேன், நானும் வெஜிட்டேரியன் செளந்தர்யாவும் வெஜிட்டேரியன். அவர்களுக்கு என்று சமைக்க தனியாக ஆட்கள் வருவார்கள்.
செளந்தர்யா மேக் அப் மேன் என்னிடம் சொல்லிருக்கிறார், அவரும் வெஜிட்டேரியன் தான் சாப்பிடிவார் என்று. சொக்கத்தங்கம் படத்தின் படப்பிடிப்பின் போது செளந்தர்யா, நான் எல்லாம் ஒன்றாக இருந்து சாப்பிட்டிருக்கிறோம்.

விஜய்
பிரேமலா விஜயகாந்த் தான் தன்னை எங்கோ பார்த்துவிட்டு, சொக்கத் தங்கம் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் பாக்கியராஜிடம் சொல்லியிருக்கிறார். நடிகர் விஜய் படத்தில் தான் நான் முதலில் நடித்தேன், அவரது கடைசி படத்தில் எனக்கு வாஉப்பு கொடுத்தால் நடிப்பேன், சின்ன ரோலாக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.