கில்லியிடம் சரண்டர் ஆன மங்காத்தா, விஜய் தான் டாப்

Ajith Kumar Vijay Ghilli
By Tony Feb 03, 2026 06:30 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் கில்லி. இந்த படத்திற்கு என கல்ட் பேன் பாலோயிங் உள்ளது.

இந்த படம் பல வருடம் கழித்து கடந்த வருடம் ரீரிலிஸ் ஆகி 30 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இதை தொடர்ந்து படையப்பா ரிலிஸ் ஆகி 19 கோடி வசூல் செய்து கில்லி சாதனையை முறியடிக்க தவறியது.

கில்லியிடம் சரண்டர் ஆன மங்காத்தா, விஜய் தான் டாப் | Mankatha Failed To Beat Ghilli In Re Release

ஆனால், மங்காத்தா வந்தால் கண்டிப்பாக முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மங்காத்தாவும் 21.9 கோடி மட்டுமே வசூல் செய்து இந்த சாதனைதை முறியடிக்க தவறியுள்ளது.

அதோடு கில்லி வெளிவந்தது கோடை விடுமுறை, மேலும் அப்போது எந்த ஒரு படமும் ரிலிஸ் ஆகவில்லை, படையப்பா மற்றும் மங்காத்தா வெளிவந்தது மிக மந்தமான நாட்கள் கூடவும் பல புதிய படங்கள் வெளிவந்தது. அதனால் தான் முறியடிக்கவில்லை என ஒரு சிலர் கூற, எது எப்படியோ இப்போதிக்கு கில்லி தான் டாப்.