காத்திருக்க வேண்டாம்.. காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்ட அதிரடி பதிவு

Tamannaah Tamil Cinema Actress
By Bhavya Mar 19, 2025 10:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா. அந்த வகையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

காத்திருக்க வேண்டாம்.. காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்ட அதிரடி பதிவு | Actress Tamannaah Post After Breakup

இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவித்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.

அதிரடி பதிவு

இந்நிலையில், காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

காத்திருக்க வேண்டாம்.. காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்ட அதிரடி பதிவு | Actress Tamannaah Post After Breakup

அதில், " வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்" என பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக தமன்னா இப்படி கூறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.