நடிகை த்ரிஷா 22 ஆண்டுகளில் இத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளாரா! எவ்வளவு தெரியுமா

Trisha Actress Net worth
By Kathick Dec 16, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று 22 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.

விஜய், அஜித், சூர்யா என தற்போதும் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி நடிகை த்ரிஷா சினிமாவில் காலடி எடுத்து வைத்து 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா 22 ஆண்டுகளில் இத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளாரா! எவ்வளவு தெரியுமா | Actress Trisha 22 Years In Cinema Net Worth

இந்த நிலையில், 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.