கோவிலில் அப்படி நடக்கவே இல்லை.. இளையராஜா சர்ச்சைக்கு கொடுத்த விளக்கம்
இசைஞானி இளையராஜா பல ஆயிரம் பாடல்கள் இசையமைத்து, ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் எவர்கிறீன் பாடல்கள் கொடுத்தவர். அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்ற போது அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியானது.
அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படுவது இல்லை என அறநிலையதுறை இந்த சர்ச்சைக்கு பதில் அளித்து இருக்கிறது.
இளையராஜா விளக்கம்
இந்நிலையில் அந்த செய்தியே வதந்தி, நடக்காத ஒன்று என இளையராஜா விளக்கம் கொடுத்து X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.

— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024