திரிஷாவை கூட்டிட்டு வந்தது அதுக்கு இல்லையா!! கமலுக்கு மணிரத்னம் கொடுத்த Thug Life..

Kamal Haasan Trisha Mani Ratnam
By Edward Jan 25, 2024 05:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கம்பேக்கிற்கு பின் நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறிக்கொண்டே சென்றுள்ளது. 96 படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து ஹிட் கொடுத்த நடிகை திரிஷா, அதன்பின் பொன்னியின் செல்வன் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் குந்தவையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்தும் இருந்தார்.

திரிஷாவை கூட்டிட்டு வந்தது அதுக்கு இல்லையா!! கமலுக்கு மணிரத்னம் கொடுத்த Thug Life.. | Actress Trisha Is Not Pair With Kamal In Thug Life

தற்போது, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் Identity, மோகன்லாலின் ராம் என்ற படங்களிலும் நடித்தும் வருகிறார் திரிஷா. இதனையடுத்து கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் பல ஆண்டுகள் கழித்து Thug Life என்ற படம் மூலம் இணைந்துள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, கெளத ம் கார்த்திக், நடிகை அபிராமி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் இன்று 25 ஆம் தேதி ஆரம்பித்துள்ளனர்.

திருமணம் செய்து குழந்தை பெத்துக்கனும்!! இலங்கை அமைச்சருக்கு ஐஸ் வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

திருமணம் செய்து குழந்தை பெத்துக்கனும்!! இலங்கை அமைச்சருக்கு ஐஸ் வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

இந்நிலையில் நடிகை திரிஷா படத்தில் கமிட்டாகிய போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் திரிஷா, கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம், வேறொருவருக்கு தான் ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளாராம் நிச்சயம் கமலுக்கு ஜோடி இல்லையாம்.

விக்ரம் படத்திலும் கமலுக்கு ஜோடியே இல்லாமல் காட்டப்பட்டு பக்கா ஆக்ஷன் படமாக அமைந்ததை போன்று இப்படமும் அப்படியான கதைக்களத்துடன் பிரம்மாண்ட முறையில் உருவாகவுள்ளதாம்.

GalleryGalleryGallery