விஜய்க்காக இப்படியொரு காரியத்தை செய்த திரிஷா!! நார்வே வெகேஷன் சீக்ரெட் இதுதானா..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் உருவாகி வரும் படம் லியோ. கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து பல கோடி ரசிகர்களால் லோகேஷ் கனகராஜின் சினிமா யூனிவர்ஸ்-க்காக காத்திருக்கிறார்கள்.
அதிலும் நட்சத்திரங்களின் கேரக்டர் தான் பல கோணங்களில் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டு யூகித்தும் வருகிறார்கள். அந்தவகையில், நடிகை திரிஷாவும் லியோ படத்தில் நடித்துள்ளதால் அவர் என்ன பதிவு போட்டாலும் எல்சியூ-வை வைத்து பலர் அப்டேட்டும் கேட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகை திரிஷா வெளிநாட்டு பயணத்தில், குளிர்பானம் குளிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் நடிகை திரிஷாவின் கையில் டாட்டூ தெரிந்துள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் திரிஷா எந்த கேங்க் சம்மந்தப்பட்டவர் என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் அது திரிஷாவின் பழைய டாட்டூ தான் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
