பைத்தியக்காரத்தனமாக, திருமணத்திற்கு பின் வரும் காதல்.. த்ரிஷா உடைத்த அந்த விஷயம்
Trisha
Tamil Cinema
Actress
By Bhavya
த்ரிஷா
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
முதல் படமே வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
ரகசியம்
இவர் 42 வயதை எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வருகிறார். இந்நிலையில், காதல் குறித்து த்ரிஷா முன்பு பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஒரு பைத்தியக்காரத்தனமாக காதலையே நான் விரும்புகிறேன். அது திருமணத்திற்கு முன் வரும் காதலாக இருந்தாலும் சரி. அல்ல திருமணத்திற்கு பின்பு வரும் காதலாக இருந்தாலும் சரி.
ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். சமீபத்தில், கூட தக் லைஃப் படம் குறித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து த்ரிஷா பேசியது குறிப்பிடத்தக்கது.