காதலர் தினத்தில் நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க
Trisha
By Kathick
தற்போதைய தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நாயகியாக இருக்கும் த்ரிஷா காதலர் தினத்தில் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்தான் நடிகை த்ரிஷாவின் zorro என்கிற நாய் மரணமடைந்தது. தனது நாய் இறந்தது குறித்து மிகவும் சோகமான பதிவை த்ரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது புது valentine என குறிப்பிட்டு தனது புதிய நாய் குட்டியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இந்த நாய் குட்டிக்கு Izzy என பெயர் சூட்டியுள்ளாராம்.
இந்த பதிவில் "My forever Valentine" என்றும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். காதலர் தினத்தில் த்ரிஷா வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.