நான் என்ன கறவ மாடா.. வாலியிடம் சண்டைக்கு நின்ற நடிகை ஊர்வசி.. நடந்தது என்ன தெரியுமா!!
நடிகை ஊர்வசி
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பட்டி பறந்த முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஊர்வசி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருகிறார். அவர் முன் பாடலாசிரியர் வாலியிடம் சண்டைக்கு நின்ற சம்பவம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
1994ல் சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த மகளில் மட்டும் படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். அப்படத்தில் நடிகை ஊர்வசி முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
படத்தில் பாடல் ஒன்றில் கறவ மாடு மூணு என நடிகைகள் ரேவதி, ஊர்வசி, ரோகினி ஆகியோறை குறிப்பிட்டு எழுதியிருப்பார் வாலி. கறவ மாடு என்ற வரியில் ஊர்வசிக்கு உடன்பாடில்லாததால் அப்பாடலில் நடிக்க மறுத்துவிட்டாராம் ஊர்வசி.
வாலியிடம் சண்டை
விஷயம் அறிந்த வாலி, ஏன் ஊர்வசிக்கு இந்த விபரீதமான என்னமெல்லாம் வருது, இதுதான் அர்த்தம்னு விவரமாக சொல்லிட்டு டேக் இட் ஈஸி ஊர்வசின்னு சொன்னாராம்.
டேக் இட் ஈஸி ஊர்வசி பாடலை உன்ன வச்சுதான் எழுதுனேன், ஊசிபோல உடம்பு இருந்தா என்கிற வரியில் நீ உடம்பு கூடுவதை சொல்லி இருக்கிறேன் என்றாராம் வாலி. நான் சண்டை போட்டதை மனதில் வைத்துக்கொண்டு வாலி சார் எனக்காக பாடல் மூலம் ரீப்ளை கொடுத்ததை மறக்க முடியாது என்று ஊர்வசி அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார.