தமிழ் சினிமாவில் என் அக்காவிடம் அப்படி நடந்துகொண்டனர்!! ஊர்வசி வேதனை
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, தனது அக்காவும் பிரபல நடிகையுமான கல்பனா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய அக்கா கல்பனாவிற்கு வந்த பட வாய்ப்புகளில் நான் நடித்தேன். இதனால் என் மீது அவர் கோபப்பட்டதே கிடையாது, என்னுடைய வளர்ச்சியை பார்த்து மகிழ்வார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் என் அக்காவுக்கு சரியான மரியாதையே அளிக்கவில்லை. ஆதலால் நான் ஆரம்பத்தில் இருந்தே பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன்.
உண்மையில் என்னுடைய அக்கா என்னைவிட ரொம்ப திறமைசாலி அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று ஊர்வசி எமோஷனலாக பேசியுள்ளார்.