மார்பக புற்றுநோய்!! 32 லட்சம் இல்லாமல் 48 வயதில் உயிரைவிட்ட நடிகை..
நடிகை வாஹினி
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான வாஹினி என்ற பத்மக்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்ளில் நடித்துள்ள வாஹினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அவரின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன.

கீமோ தரப்பி என பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததால் மருத்துவ செலவு அதிகமாகியுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க இன்னும் 32 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன் வராததால், அதை அவரது குடும்பத்தினரால் சமாளிக்க முடியவில்லை.
கராத்தே கல்யாணியின் சமூக ஊடக வேண்டுகோள் மூலம் ஓரளவு நிதி திரப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. வீட்டிற்கு அனுப்பட்ட வாஹினி, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 48 வயதில் உயிரிழந்தார். இளம் வயதிலேயே அவரது மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.