தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த அந்த நாயகி.. இவரா?

Ramya Krishnan Naga Chaitanya Nagarjuna
By Bhavya Sep 15, 2025 10:30 AM GMT
Report

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரு கதாநாயகி உள்ளார்.

தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த அந்த நாயகி.. இவரா? | Actress Who Act With Three Generation

இவரா? 

அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அவர் வேறு யாருமில்லை, நடிகை ரம்யா கிருஷ்ணன்தான்.

இவர் தமிழில் 1983ல் வெளிவந்த வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றவருக்கு படையப்பா படம் தனி அடையாளத்தை உருவாக்கியது.

அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் பணியாற்றினார். நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, ஹலோ பிரதர், அன்னமய்யா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மாமியார் வேடத்திலும், பங்கர்ராஜு படத்தில் பாட்டி வேடத்திலும் நடித்துள்ளார்.         

தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த அந்த நாயகி.. இவரா? | Actress Who Act With Three Generation