உலகநாயகனுக்காக போட்டிப்போட்ட 106 பேர்!! கமலுக்காக எதையும் கேட்காமல் ஓகே சொன்ன பிரபல நடிகை!!

Kamal Haasan Saritha Maaveeran
By Edward Jul 17, 2023 06:02 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா. தப்புத்தாளங்கள் என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகை சரிதா 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பல விருதுகளை கைப்பற்றி புகழ்பெற்ற சரிதா, 1975ல் சுப்பையா என்பவரை திருமணம் செய்து ஒரேவொரு ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து 1988ல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றார். அவருடன் 23 ஆண்டுகள் வாழ்ந்தப்பின் கருத்து வேறுபாடு அவருடனும் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். சினிமாவில் இருந்து விலகிய பல ஆண்டுகள் கழித்து 2011 அவரை விவாகரத்து செய்து வெளிநாட்டில் மகன்களுடன் செட்டிலாகினார்.

தற்போது 10 ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சரிதா. படமும் வெளியாகி சரிதாவுக்கு நல்ல ஒரு ஸ்கோப் பெற்றுத்தந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், கமலுக்காக கதைக்கூட கேட்காமல் ஆடிஷனுக்கு சென்ற விசயத்தை கூறியிருக்கிறார்.1978ல் கமல் ஹாசனுடன் இணைந்து சரிதா கே பாலசந்தர் இயக்கத்தில் மரோசரித்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் இந்தியாவில் சிறந்த 100 படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெற்றிருந்தது.

அப்படத்தில் நடிக்க சரிதாவை அணுகிய போது கமல் ஹாசன் தான் என்று சொன்னவுடன் படத்தின் கதையை கூட கேட்காமல் ஆடிஷனுக்கு கலந்து கொள்ள ஓகே சொல்லியதாகவும் என்னுடைய கிரஷ் கமல் ஹாசன் தான், ஆடிசனில் கலந்து கொள்ள 106 பேர் தேர்வாகி இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அப்படத்தில் சரிதா மிகப்பெரிய நடிப்பை வெளிப்படத்தி அழகைவிட திறமை முக்கியம் என்று நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.