25 வயதான நடிகை யாஷிகா ஆனந்தின் நியூ லுக் போட்டோஷூட்... இதோ..
மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து பிரபலமானர்வர்களில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அரையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த யாஷிகா, அப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 98 நாட்கள் இருந்த யாஷிகா 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா, 2021 கார் விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு குணமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சைக்கு பின் திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீம், சல்ஃபர் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்க்கும் யாஷிகா, ரசிகர்கள் வியக்கும் படியான ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.