யாஷிகா ஆனந்த் கொடுத்த லிப் லாக்.. புகைப்படத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர். பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவத்தால் அவரது தோழி மரணமடைய யாஷிகாவிற்கு கடுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் 4 மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு சரியாகினார். பழையபடி தன்னுடைய படங்களில் ஷூட்டிங்கை ஆரம்பித்தும் போட்டோஷூட் பக்கம் சென்று இதுவரை இல்லாத அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது மறைந்த தன் தோழி பவானிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் பண்ணிட்டு இப்போது இதெல்லாம் தேவையா என்று திட்டி வருகிறார்கள்.