சிவாஜி-ன்னா ஓகே!! எம்ஜிஆர்-ன்னா வேண்டாம் என்று ஒதுக்கி வந்த 5 நடிகைகள்..
தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை காலத்தில் இருதுருவ நட்சத்திரங்களாக கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இருவருக்கும் இடையில் நட்பு இருந்தாலும் தொழில் அளவில் போட்டி இருந்து தான் வந்துள்ளது. இவர்களுடன் இணைந்து நடிக்க பல நட்சத்திரங்கள் போட்டிப்போடுவார்கள்.
அதில் நடிகைகளும் உண்டு. ஆனால் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு நடிகையை இத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கும் அப்படி தான் எம்ஜிஆருடன் நடிகை ஜெயலலிதா சில காலம் நடித்தும் சில காலம் நடிக்காமல் இருந்தும் வந்தார்.
அதற்கிடையில் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தும் வந்தார் ஜெயலலிதா. அப்படி சிவாஜியுடன் நடித்தும் எம்ஜிஆருடன் நடிக்காமல் போன முக்கிய 5 நடிகைகள் இருக்கிறார்கள்.
அதில் நடிகை ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீவித்யா, உஷா நந்தினி, பிரமிளா போன்ற நடிகைகள் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்துள்ளார்கள்.
ஆனால் எம்ஜிஆரின் படத்தில் வாய்ப்பு கூட வராமல் இருந்துள்ளது. இதில் ஸ்ரீதேவி மட்டும் சிறுமியாக ஒரு படத்தில் எம்ஜிஆருடன் நடித்துள்ளார்.