கமலுடன் ரொமான்ஸ் செய்து ரஜினியை ஒதுக்கிய முக்கிய நடிகைகள்!! மாட்டிமுழித்த வருத்தப்பட்ட சினேகா..
தமிழ் சினிமாவில் இரு உச்சக்கட்ட நடிகர்களாக திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன். தங்களுடைய திறமையால் தனக்கென்று ஒரு பெயரை நிலைநிறுத்திகொண்டு வருகிறார்கள். ஆனால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்து கமலுடன் ரொமான்ஸ் செய்து ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டாம் என்று இருந்த நடிகைகள் இருக்கிறார்கள்.
ஊர்வசி
அந்தவகையில் நடிகை ஊர்வசி, கமல் ஹாசனுடன் 1990ல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் படத்திலும் நடித்து நல்ல ஜோடிப்பொருத்தம் என்று கூறும் அளவிற்கு நடித்திருந்தார் ஊர்வசி. ஆனால் ரஜினிகாந்துடன் இன்று வரை இணைந்து நடிக்க வாய்ப்பு பெறாமல் இருந்துள்ளார்.
சுகன்யா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை சுகன்யா கமலுடன் இணைந்து மகாநதி படத்தில் நடித்தும் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு பெறாமலும் இருந்துள்ளார்.
தேவயானி
இன்று கதாநாயகியாக திகழ்ந்து வரும் நடிகை தேவயானி, கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் சிறிய ரோலில் பஞ்சதந்திரம், தெனாலி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க கூட வாய்ப்பு பெறாமல் ஒதுங்கி வருகிறார்.
சினேகா
புன்னகை அரசியாக திகழ்ந்து வரும் நடிகை சினேகா, கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பாப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் ரொமான்ஸ் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ரஜினிகாந்துடன் நடிக்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை.
அசின்
கமல் ஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தசவதாரம். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்திருந்தார். ஆனால் விஜய், அஜித், கமலுடன் நடித்த அசின் ரஜினிகாந்த் வாய்ப்பினை பெறாமல் இருந்திருக்கிறார்.