நட்சத்திரங்களுக்கு நோ எண்ட்ரி!! கெளதம் அதானி மகன் ஜீத்தின் திருமணம் இப்படித்தான் நடக்குமாம்..
ஜீத் - திவாஷா திருமணம்
பிரபல தொழிலதிபரான கெளதம் அதானியின் மகன் ஜீத்திற்கும் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
அம்பானியின் மகன் திருமணத்தை போன்று பிரமாண்டமாக திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து சில விஷயங்களை கெளதம் அதானி பகிர்ந்துள்ளார்.
கெளதம் அதானி பேட்டி
அதில், எனது மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எங்கள் வீட்டு நிகழ்ச்சி சாதாரண மக்கள் வீடுகளில் நடக்கும் திருமணத்தை போன்று தான் நடைபெறும்.
நான் கங்கை அன்னையின் ஆசிர்வாததை பெறவே இங்கு வந்தேன். ஜீத்தின் திருமணம் மிகவும் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும். அது எளிமையான முறையிலும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள், ஜீத் அதானியின் திருமணம் பிரபலங்கள் முன்னிலையில் நட்சத்திரங்கள் நிறைந்த திருமணமாக இருக்குமா? என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு அதானி, அது அப்படி இருக்காது, குடும்பத்தினர் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே பிரபல பாடகியும் நடிகையுமான டெய்லர் ஸ்விஃப்ட் கலந்து கொள்வதாக செய்திகள் வருவது வதந்தி என்றும் கூறப்படுகிறது.