ஐஸ்வர்யாவுடன் இரண்டாம் திருமணம்!! பிரபுவின் மருமகனானார் விஷால் பட இயக்குனர் ஆதிக்..

Prabhu Vikram Prabhu Wedding Tamil Directors Mark Antony
By Edward Dec 15, 2023 04:15 AM GMT
Report

தமிழில் திரிஷா இல்லனா நயன் தாரா, AAA, பகீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆதி ரவிச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருக்கிறார் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஏற்கனவே இந்த செய்தி இணையத்தில் உலா வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தினை இயக்கி 100 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுடன் இரண்டாம் திருமணம்!! பிரபுவின் மருமகனானார் விஷால் பட இயக்குனர் ஆதிக்.. | Adhik Ravichandran Prabhu Daughter Aishwarya Weds

அவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் நடிகர் விஷாலும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்திருக்கிறார்.

மேலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கடந்த 2009ல் குணால் என்பவருடன் திருமணம் நடந்து சில வருடங்களுக்குள் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து தான் ஆதிக் ரவிச்சந்திரனை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.