தமிழன்டா எந்நாளும்.. நடிகர் தனுஷால் துபாய் வரை சென்ற தமிழ் மொழியின் பெருமை!

Dhanush Tamil Cinema Tamil Actors
By Bhavya Nov 21, 2025 07:30 AM GMT
Report

தனுஷ்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

அதன் பின் தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடித்துள்ள Tere Ishk Mein என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழன்டா எந்நாளும்.. நடிகர் தனுஷால் துபாய் வரை சென்ற தமிழ் மொழியின் பெருமை! | Actor Dhanush Open Talk About Tamil Language

தமிழின் பெருமை!  

இந்நிலையில், அண்மையில் நடிகர் தனுஷ் துபாய் சென்றுள்ளார். அங்கு துபாய் வாட்ச் வீக் நிகழ்வில் கலந்துகொண்டவர் தமிழ் மொழி பற்றி பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், " நான் தமிழன், தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழன்டா எந்நாளும்.. நடிகர் தனுஷால் துபாய் வரை சென்ற தமிழ் மொழியின் பெருமை! | Actor Dhanush Open Talk About Tamil Language