இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது! நடிகை அதுல்யா பெயரில் ஏமாற்றி வரும் மர்ம நபர்கள்!

facebook adhulya ravi
By Edward Apr 26, 2021 01:00 PM GMT
Report

இளம் நடிகைகள் தமிழ் சினிமாவில் பலர் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து ஏமாளி, கதாநாயகன், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இதையடுத்து, போட்டோஹுட் பக்கம் சென்று க்ளாமர் கலந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், ஃபேஸ்புக் செயலியில் என் பெயரை கொண்டு போலியான பக்கத்தை உருவாக்கி சிலர் திரையுலக பிரபலங்களுக்கு செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.

இதை அறிந்த பிறகு, இதுபற்றி புகார் அளித்துள்ளேன் நான் பேஸ்புக்கில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அதுல்யா ரவியும் தனது பெயரில் உள்ளது போலி பேஸ்புக் பக்கம் என்றும், அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் யாரும் அதில் உள்ள தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அந்த தகவல்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.