அனாதை இல்லத்தில் சேர்த்த தந்தை!! குடிக்கு அடிமையாக 38 வயதில் உயிரைவிட்ட நடிகை...
மீனா குமாரி
1950-களில் இந்திய சினிமாவின் நட்சத்திரமாக விளங்கிய நடிகை தான் நடிகை மீனா குமாரி. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை, பொருளாதார நெருக்கடி என இருந்த சமயத்தில், ஒரு வேலைக்கு சென்றாக வேண்டும் என்று இருந்தபோது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்தார் மீனா குமாரி.
1946ல் பச்சோ கா கேல் என்ற படத்தில் நாயகியாகவ தடம்பதித்த மீனா குமாரி, நடிகையாக மட்டுமில்லாமல், கவிஞர், பின்னணி பாடகி, காஸ்ட்டியூம் டிசைனர் என பன்முக திறமைகளை கொண்டு டாப் இடத்தில் இருந்தார்.
30 ஆண்டுகளாக நடிகையாக வலம் வந்த மீனா குமாரி, 1952ல் புகழ்பெற்ற இயக்குநர் கமல் அம்ரோஹி என்பவரை திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக இருந்து 1964ல் சண்டை ஏற்பட்டு கணவரை பிரிந்தார்.
பின் மதுவுக்கு அடிமையான மீனா குமாரி, கடுமையான மது பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, லண்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். 1972ல் மீனா குமாரி நடித்த பாகிசா படம் வெளியாகி பிளாக்பஸ்டர் அளவிற்கு ஹிட்டானது.
குடிக்கு அடிமை
1972 அப்படம் வெளியான சில வாரங்களில் மீனா குமாரி உயிரிழந்தார். வெறும் 38 வயதில் அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மீனா குமார்யின் தந்தை, தனக்கு மகன் பிறப்பான் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால், அவரை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டாராம்.
பின் மனம் கேட்காமல் சில மணி நேரத்திலேயே மீனா குமாரியை வீட்டுக்கு எடுத்துச்சென்றுவிட்டாராம். அன்று வீட்டுக்கு எடுத்துச்சென்றதால் 50களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார் மீனா குமாரி.