கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. ஆதிபுருஷை வெச்சு செய்யும் தமிழ் ரசிகர்கள்

Prabhas
By Parthiban.A Oct 03, 2022 11:05 AM GMT
Report

ஆதிபுருஷ்

கடந்த சில தினங்களாக ட்விட்டரில் தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா சண்டை தான் நடந்துகொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் பாகுபலி அளவுக்கு இல்லை என தெலுங்கு ரசிகர்கள் விமர்சிக்க அதற்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

பாகுபலியின் பல காட்சிகள் பொன்னியின் செல்வனில் இருந்து திருடி இருக்கிறார் ராஜமௌலி என பலரும் விமர்சித்தனர். இந்த சண்டை சற்று ஓய்ந்த நிலையில் நேற்று மலை பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தின் டீஸர் வெளியாகி பேசுபொருளாக மாறி இருக்கிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் அதை மோசமாக கலாய்த்து இருக்கிறார்கள். பார்க்க கார்ட்டூன் போல இருக்கிறது, சாட்டிலைட் உரிமை சுட்டி டிவிக்கா இல்லை கார்ட்டூன் நெட்ஒர்க் சேனலுக்கா என கூறி கலாய்த்து வருகிறார்கள்.

#DisappointingAdipurish என்று ஹாஸ் டேக் தற்போதும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.+