ராஜலட்சுமியை வைத்து அதிதியை வளரவிடாமல் செய்யும் சதி.. உண்மையில் யுவன் இப்படி செய்தாரா?

Karthi Yuvan Shankar Raja Shankar Shanmugam Aditi Shankar Viruman
By Edward Aug 13, 2022 06:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது எந்தப்பக்கம் சென்றாலும் விருமன், அதிதி சங்கர் பற்றி தான் பேச்சு. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, சங்கர் மகள் அதிதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் நேற்று வெளியான படம் விருமன்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கிராமத்துக்கதைக்களத்துடன் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அதிதி சங்கரின் பிரச்சனை தான் அங்கும் இங்கும் எல்லா இடமும் பேசப்பட்டு வருகிறது. பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அதிதி பேசிய விசயங்கள் ரசிகர்களை கவர்ந்து வந்தது.

ராஜலட்சுமியை வைத்து அதிதியை வளரவிடாமல் செய்யும் சதி.. உண்மையில் யுவன் இப்படி செய்தாரா? | Aditi Has Revealed This Fact Of Viruman Song Issue

இதன்மூலம் அடுத்த சிவகார்த்திகேயன் படத்தினையும் 25 லட்ச சம்பளத்தில் புக்காகியும் இருக்கிறார் அதிதி சங்கர். இந்நிலையில் மதுர வீரன் பாடலில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை பாட வைத்துவிட்டு பின் அதிதியை பாடவைத்து படத்தில் போட்டுள்ள விசயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதுகுறித்து ராஜலட்சுமி இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்ற்ம் அதன் விளக்கத்தையும் கொடுத்தார். ஆனால் இப்பாடலை முதலில் யுவன் சங்கர் ராஜா அதிதி சங்கரை வைத்து தான் பாட வைத்திருக்கிறாராம். அதன்பின் தான் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியை பாட வைத்துள்ளார். இருவர் பாடியதில் எது நன்றாக கவரும் படியாக இருக்கிறது அதை தேர்வு செய்து அதிதி பாடியதை வைத்திருக்கிறார் யுவன்.

ராஜலட்சுமியை வைத்து அதிதியை வளரவிடாமல் செய்யும் சதி.. உண்மையில் யுவன் இப்படி செய்தாரா? | Aditi Has Revealed This Fact Of Viruman Song Issue

அப்படியே இந்த விசயத்தை பெரியதாகி அதிதி பெயரை கெடுக்கும் வகையில் விமர்சனங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். இந்த விசயத்தை அதிதி சங்கர் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இயக்குனர் மகள் நடிகையாக அறிமுகமாகினால் இப்படியொரு சதி நடக்குமா என்று ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் விருமன் ரசிகர்கள். அப்படத்தில் அதிதி சங்கரின் நடிப்பை பலர் புகழ்ந்து தள்ளியும் வருகிறார்கள்.