இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை அதிதி ராவ் ஹைதரி.. எவ்வளவு தெரியுமா
Aditi Rao Hydari
Net worth
By Kathick
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், நடிகை அதிதியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 60 கோடி என கூறப்படுகிறது. இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
அதிதியின் கணவரும் பிரபல நடிகருமான சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.