காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!! கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர் உருக்கம்..
காலில் விழுந்து விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர்
பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு
அதில் சிக்கிய 41 பேர் உயிரிழந்த சம்பவம்
இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை
ஏற்படுத்தியது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரின் கட்சினரை பலரும் விமர்சித்தும் கண்டித்தும் வந்தனர். இதனையடுத்து விஜய் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். கரூர் தாந்தோனி மலை சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரின் மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆனந்த ஜோதியையும் அவரது குடும்பத்தினரையும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள அறையில் தனியாக விஜய் சந்தித்திருக்கிறார்.
அப்போது , இந்த சம்பவத்திற்கு பின் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் உடல் இளைத்து மெலிந்து காணப்பட்டதாகவும் மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு அவரை காணவே தங்களுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள் என்று கூறி ஆனந்த் ஜோதியின் தாயார் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக ஆனந்த ஜோதி தெரிவித்துள்ளார்.
மேலும், உதவிகள்
தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காமல்
கேளுங்கள் எந்த உதவியாக இருந்தாலும்
நான் செய்து தருகிறேன் என்று கூறியதாக
தெரிவித்துள்ளார்.