பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்!! அனுபமாவுக்கு ஆதரவாக நடிகை அதிதி ஷங்கர்..
அனுபமா
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

மேலும் தன்னை மொத்தமாக அந்த நபர் கட்டுப்படுத்த பார்த்தார், இனிமேல் ஒத்து வராது என்று நிரந்தரமாக பிரிந்துவிடலான் என்று முடிவெடுத்தேன் என்றும் திருமணம் செய்து 11 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டேன், ஆனால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பால் இப்போது திருமணத்தின் மீதே பயம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
இந்ந சம்பவம் பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை அதிதி ஷங்கர் இது குறித்து பேசியுள்ளார்.
பெரிய விழிப்புணர்வை
அதில், நடிகை ஒருவரின் பேட்டி பார்த்தேன், அதுகுறித்து எல்லோருக்கும் பல கருத்துகள் இருக்கலாம் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னதற்காக அந்த நடிகையை பாராட்டத்தான் செய்ய வேண்டும், அது உண்மையான விஷயம், தனிப்பட்ட அனுபவம்.

யாரையும் பொதுவெளியில் குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு கிடையாது என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
பல பெண்கள், ஆண்கள் இதே விஷயத்தை எதிர்கொண்டு வருகிறார்கள், ஆனால் தங்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கிறது என்று பேசியுள்ளார்.