கமிட்டாகும் முன்பே இப்படியொரு அக்ரிமெண்ட்!! சங்கர் மகள் அதிதியின் பக்கா பிளான்
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் மகள் டாக்டர் படிப்பை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விருமன் படத்தில் கமிட்டாகினார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி முதல் படத்திலேயே பாடகியாகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கலக்கினார்.
அப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் 25 லட்ச சம்பளத்தில் கமிட்டாகினார்.
விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் மாவீரன் படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருக்கிறார் அதிதி சங்கர்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிக்கிற படத்தில் பாடுவேன்னு கண்டீசன் போட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவீர்களா? என்ற கேள்விக்கு கண்டீசன் எல்லாம் போடுவதில்லை என்றும் அப்பா, தனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால் மெடிக்கல் படிக்கும் போதே சங்கீதம் கற்றுக்கொள்ள வைத்தார்.
அதன்பின் விருமன் படத்தில் மதுரவீரன் பாடலுக்கு பாடினேன் என்றும் மாவீரன் படத்தின் பூஜையின் போது இசையமைப்பாளர் பரத்திடன் எனக்கு ஒரு பாடல் இருந்தால் மட்டும் கொடுங்க என்று கேட்டுவிட்டேன்.
அதனால் தான் வண்ணாரப்பேட்டை பாடலை எனக்கு கொடுத்தார் பரத் என்று தெரிவித்துள்ளார். அப்படி கமிட்டாகும் அனைத்து படங்களிலும் இந்த வாய்ப்பை அதிதி சங்கர், கெஞ்சியாவது ஒரு பாடலை பாட வாய்ப்பு வாஙிகிவிடுவேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.