நடிச்சது ரெண்டே ரெண்டு படம் தான்!! சங்கர் மகள் நடிகை அதிதி சம்பளம் இவ்வளவா..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், தன்னுடைய மகள் அதிதி சங்கரை டாக்டர் படிக்க வைத்தார். ஆனால் அதிதிக்கு நடிப்பின் மேல் இருந்த ஆசையால் அப்பாவின் ஒப்புதலுடன் முதல் படமான கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
அப்படத்தில் ஒரு பாடலையும் பாடி முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகினார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வின் மனோன் இயக்கத்தில் மாவீரன் படத்தில் கமிட்டாகினார்.
படம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உட்பட பலரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிதி சங்கர் நடித்த விருமன் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தார் என்று கூறப்பட்டது. தற்போது மாவீரன் படத்திற்காக நடிகை அதிதி சங்கர் ரூபாய்.
25 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். நடிச்ச ரெண்டே ரெண்டு படத்தில் 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கும் அதிதியால் மற்ற நடிகைகள் அப்செட்டில் இருந்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அதிதி சங்கர்.