எனக்கு கல்யாணமா!! வருங்கால மாப்பிள்ளையை பற்றி வாய்திறந்த சங்கர் மகள் நடிகை அதிதி
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். சினிமா ஒரு புறம் இருக்க அவரது இருமகள்கள் வாழ்க்கையை நினைத்து நிம்மதி இல்லாத நிலைக்கு இருந்து வருகிறார்.
முதல் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி 6 மாதத்தில் மருமகன் கைது செய்யப்பட்டதால் விவாகரத்து வரை சென்றுள்ளார். அதை தொடர்ந்து டாக்டர் படிப்பை படிக்க வைத்த அதிதியை, பெரிய டாக்டராக்கி வெளிநாட்டில் செட்டிலாக்க வேண்டும் என்ற பெரிய ஆசைஅயி வைத்திருக்கிறார் சங்கர்.
ஆனால், அதைவிட்டுவிட்டு சினிமா பக்கம் சென்றார் அதிதி. மகளின் ஆசைக்காக ஒருசில படங்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்த அப்பாவுக்கே தெரியாமல் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அதிதி சங்கர்.
அவரது குடும்பத்திற்கு அதிதி நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் விரைவில் ஒரு பெரிய இடத்து வரனை பார்த்து செட்டிலாக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் சங்கர். இந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதிதி சங்கர் ஒரு பதிவினை போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கிறேன், யார் அந்த மாப்பிள்ளை என்று இப்போது தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி பதிலடி கொடுத்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
