பிரபல நடிகரின் தம்பியுடன் நடிகை அதிதி ஷங்கர்.. அந்த விஷயதில் இணைந்த இரு வாரிசுகள்
Atharvaa
Aditi Shankar
By Kathick
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றி அதிதி ஷங்கரை பலரிடம் கொண்டு சேர்த்துள்ளது. படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட்டிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகாஷுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவருடைய மாமனார் தான் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.