2 வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!! அதிதி சர்மா எடுத்த அதிரடி..
அதிதி சர்மா
பிரபல பாலிவுட் சீரியல் நடிகை அதிதி சர்மா சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கில்லாடி நிகழ்ச்சியின் 14வது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமானார். கடந்த 2024 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் அபிநீத் வித்யானந்த் கெளசிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமானதில் இருந்தே கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தியதாகவும் கோரேகான் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து அபிநீத் வித்யானந்த் கெளசிக் மீதும் அவரது அம்மா, சகோதரி மீது் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி FIR போடப்பட்டு விசாரனை நடத்தி வருகிறார்கள்.

தனக்கு வெறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகத்தை கிளப்பியதுடன் என் செல்போனை அடிக்கடி சோதித்தும் பார்க்கிறார், சாதாரண டீ பிரச்சனையில் ஆரம்பித்த சண்டை இன்று விவாகரத்து வரை சென்றுவிட்டது. திருமணத்தின்போது நான் அணிந்து வந்த தங்க, வைர நகைகளை என் மாமியார் எடுத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று நடிகை அதிதி saர்மா கூறியிருக்கிறார்.