விவாகரத்து செய்யப்போகிறாரா நடிகை சைத்ரா ரெட்டி? இணையத்தில் பரவும் தகவல்
Serials
Divorce
Actress
By Karthick Raja
கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

சைத்ரா ரெட்டி
பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வரும் நிலையில், சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து நடிகை சைத்ரா ரெட்டி திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து
அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் சைத்ரா, தற்போது புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளாராம்.

இந்நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்யப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.