திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்..எல்லாமே இப்போ நடந்துவிட்டது!! இயக்குநர் பிரவீன் காந்தி..

Trisha Chief Minister of Tamil Nadu Praveen Gandhi
By Jai Aug 06, 2026 09:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டியொன்றில் திரிஷா குறித்து பேசிய விஷயம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்..எல்லாமே இப்போ நடந்துவிட்டது!! இயக்குநர் பிரவீன் காந்தி.. | Praveen Gandhi Predicted In Trisha Horoscope Cm

பிரவீன் காந்தி

அதில், 1999ல் வெளியான ஜோடி படத்தை தான் இயக்கியபோது நாயகியுடன் இருக்கும் காட்சிகளுக்கு அழகான மாணவிகள் வேண்டும் என்று தான் எதிர்ப்பார்த்திருந்தேன். அப்போது சர்ச் பார்க் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் திரிஷா கோடை விடுமுறையின் சூட்டிங்கிற்கு வந்தார்.

தாரா உமேஷ் என்பவர் மூலம் திரிஷா அறிமுகமாகியதும், அவரிடம் ஒரு பெரிய ரோல் கொடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை என்று சொன்னார். சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் என்றும் சொன்னார்.

திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்..எல்லாமே இப்போ நடந்துவிட்டது!! இயக்குநர் பிரவீன் காந்தி.. | Praveen Gandhi Predicted In Trisha Horoscope Cm

அவருடைய அம்மாவுக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற நினைத்து திரிஷா அப்போது வந்தார். ஆனால் அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது.

திரிஷா முதலமைச்சராகும்

திரிஷா, ஜோடி படத்தின் சூட்டிங்கிற்கு வந்தபோது அவருடைய ஜாதகத்தை பிரவீன் காந்தி பார்த்துள்ளார். அந்த சமயத்தில் பிரவீன் காந்தி ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருந்ததால் திரிஷாவின் ஜாதகத்தை வாங்கி கணித்துள்ளார்.

திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்..எல்லாமே இப்போ நடந்துவிட்டது!! இயக்குநர் பிரவீன் காந்தி.. | Praveen Gandhi Predicted In Trisha Horoscope Cm

பின் திரிஷாவின் அம்மாவிடம் இப்போதைக்கு உங்கள் பொண்ணு சினிமாவில் ஆர்வம் இல்லை என்று சொல்கிறார், ஆனால் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருப்பார் என்று சொன்னேன் அது அப்படியே நடந்துவிட்டது என்று பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ஒருநாள் முதலமைச்சராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது என்று நான் சொல்லி இருந்தேன், இப்போது நான் சொன்னபடி அவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார். அதேபோல் முதலமைச்சர் ஆவாரா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்று சிரித்தபடி பிரவீன் காந்தி பேசியுள்ளார்.