20 வருஷமாக ஒதுக்கி வந்த நயன்தாரா!! கமல் ஹாசனுக்காக ஓகே செய்த இயக்குனர்..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பலருடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார். ஆனால் இதுவரை உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவும் இல்லை கமிட்டாகி வெளியேறியதும் இல்லை.
கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சிகள் அதிகமாக வைக்கச் சொல்வார். அதனால் தான் அவரை ஒதுக்கி வருவதாக கூறப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் 20 வருட சினிமா வாழ்க்கையில் தற்போது கமலுடன் ஜோடி போடவுள்ளாராம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நயனுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஏற்கனவே நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி பரவி வருகிறது. இதன் முழு அப்டேட் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் மற்றும் மணிரத்னம் வெளியிட்டால் தான் திரிஷா? நயன் தாராவா? என்று தெரியவரும்.