கல்யாணமும் வேண்டாம் புருஷனும் வேண்டாமென்று ஒதுங்கும் நடிகைகள் !! 40 வயதை எட்டியும் மவுசு குறையாத திரிஷா
சினிமாவை பொறுத்தவரையில் தங்கள் வயதும் மார்க்கெட்டும் போனால் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்று தெரிந்து சில நடிகைகள் திருமணம் செய்யாமல் ஒத்தக்கட்டையாக இருந்து வருகிறார்கள். அதிலும் கடந்த ஆண்டு மட்டும் பல விவாகரத்து மற்றும் பல திருமணங்கள் தமிழ் சினிமாவில் நடைபெற்றது. ஆனால் சிலர் மட்டும் திருமணமும் வேண்டாம் புருஷனும் வேண்டாம் என்று சில நடிகைகள் தனிமையில் இருந்து வருகிறார்கள்.
80களின் இறுதிகாலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை சுகன்யா. கொடிக்கட்டி பறந்த போது 2002ல் திருமணம் செய்த ஒரே வருடத்தில் 2003ல் விவாகரத்தை பெற்றார். அப்போதில் இருந்து இன்று வரை சுமார் 20 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்த நடிகை அனுஷ்கா செட்டி. முன்னணி நடிகர்கள் படங்களில் கொடிக்கட்டி பறந்து வந்த அனுஷ்கா செட்டி 40 வயதை கடந்து இன்னும் திருமணமாகாமலும் சினிமா வாய்ப்பு பெறாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்.
கிட்டத்தட்ட 40 வயதை எட்டிய நடிகை திரிஷா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்று அதை நிறுத்தி இருக்கிறார். திருமணம் செய்யாமல் இருக்க, விவாகரத்து செய்யும் பிரபலங்களே என்று ஒரு சாக்கையும் கூறியிருக்கிறார்.
வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை அஞ்சலி 35 வயதை கடந்தும் பல நடிகர்களுடன் தவறாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து பிக்பாஸ் நிகழ்ச்சி வரை பலரால் ரசிக்கப்பட்டவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர். 37 வயதாகியும் திருமணம் செய்யாமலும் வாய்ப்பு கிடைக்காமலும் இருந்து வருகிறார்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். 36 வயதை எட்டியும் இன்று வரை யாருடனும் காதல் கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்து வருகிறார்.
நடிகர் சரத்குமாரின் மகளாக நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வரலட்சுமி. ஆரம்பத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட வரலட்சுமி விஷாலுடன் காதலில் சிக்கினார். ஆனால் அவரைவிட்டு பிரிந்து 38 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.
மேலும் 38 வயதான நடிகை சதா, 37 வயதான பிரியா ஆனந்த் உட்பட பல நடிகைகள் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்கள்.
பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்களிடம் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை ஆண்டிரியா. அனிரூத் மற்றும் தொழிலதிபருடன் ரகசிய தொடர்பில் இருந்தும் வந்தார். 37 வயதான ஆண்ட்ரியா திருமணத்தை ஒதுக்கி கச்சேரி மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கமல் ஹாசனின் மூத்த மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ஸ்ருதி ஹாசன். பல நடிகர்களுடன் நெருக்கமாகவும் வெளிநாட்டு நபருடன் காதலில் இருந்து பின் தோல்வியை சந்தித்தார். அதன்பின் சாந்தனு என்பவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து திருமணாமாகமல் இருந்து வருகிறார்.