84 நாள் பிக்பாஸ் சீசன் 10ல் இந்த வார எவிக்ஷன்!! அதிர்ச்சி கொடுத்த BiggBoss..
பிக்பாஸ் சீசன் 10
விஜய் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எவிக்ஷனில் போட்டியாளர்கள் போக தற்போது 8 போட்டியாளர்கள் மீதமுள்ளனர்.\

கடந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து எமோஷனலாக பேசியும் அறிவுரை கூறியும் சென்றனர்.
இந்நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டின் சூட்டிங் நடந்து முடிய, இந்த வாரம் வாசன், தன்யா உள்ளிட்டோர் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியல் இருந்தது.

எவிக்ஷன்
இப்படி இருக்க யாரும் எதிர்பாராத அதிரடியான எவிக்ஷன் இல்லை என்று அறிவித்து, போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் Bigg Boss. இன்னும் சில நாட்களில் இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில் யார் டைட்டிலை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.