டீச்சர்ஸ் அப்படி செய்தால் கேட்பதில்லை, நடிகைகளுக்கு மட்டும் கேக்குறாங்க!! நடிகை மியா ஜார்ஜ் ஆதங்கம்..

Miya Gossip Today Indian Actress Tamil Actress
By Jai Nov 29, 2026 09:44 AM GMT
Report

இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ், நடிகைகளின் திருமணத்திற்குப்பின் நடிக்க வரமாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் உருவாக்கி விடுகிறார்கள் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

டீச்சர்ஸ் அப்படி செய்தால் கேட்பதில்லை, நடிகைகளுக்கு மட்டும் கேக்குறாங்க!! நடிகை மியா ஜார்ஜ் ஆதங்கம்.. | Miya George Has About The Assumptions Actress

மியா ஜார்ஜ்

மலையாள நடிகையாக 2010ல் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை மியா ஜார்ஜ். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த மியா, தமிழில், அமரா காவியம் படத்தில் கார்த்திகா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் இன்று நேற்று நாளை, ரம், எமன், வெற்றிவேல், கோப்ரா, தி ரோட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

டீச்சர்ஸ் அப்படி செய்தால் கேட்பதில்லை, நடிகைகளுக்கு மட்டும் கேக்குறாங்க!! நடிகை மியா ஜார்ஜ் ஆதங்கம்.. | Miya George Has About The Assumptions Actress

தற்போது முக்கிய படங்களில் கவனம் செலுத்தி வரும் மியா ஜார்ஜ், கடந்த 2020ல் தொழிலதிபரான அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் நடிகைகளின் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

டீச்சர்ஸ் அப்படி செய்தால்

அதில், நமக்கே தெரியாமல் திருமணமான நடிகைகள் இனி மீண்டும் நடிக்க வர மாட்டார்கள் என்ற எண்ணத்தை சினிமாவில் உருவாக்கி விட்டார்கள்.

அதுவும் குழந்தை பெற்றுவிட்டால் நாம் மீண்டும் வரவே மாட்டோம் என மற்றவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னிடம் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்பதில்லை.

டீச்சர்ஸ் அப்படி செய்தால் கேட்பதில்லை, நடிகைகளுக்கு மட்டும் கேக்குறாங்க!! நடிகை மியா ஜார்ஜ் ஆதங்கம்.. | Miya George Has About The Assumptions Actress

ஒரு ஆசிரியை மகப்பேறு விடுப்புக்குப்பின் மீண்டும் பணிக்கு திரும்பினால் அதை யாரும் விசித்திரமாக பார்ப்பதில்லை. யாருக்கும் அதில் சிக்கல் இருப்பது இல்லை.

ஆனால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் திருமணத்திற்கும் குழந்தை பிறந்தப்பின்பும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள் என்ற முத்திரை பதிந்துவிட்டது என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் மியா ஜார்ஜ்.