விக்னேஷ் சிவனுக்கு இதுவும் போச்சா, சினிமா வாழ்க்கையே கேள்விக்குறி

Ajith Kumar Vignesh Shivan Gossip Today Pradeep Ranganathan
By Tony Jul 05, 2024 04:00 AM GMT
Tony

Tony

Report

விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் படம் மெகா ஹிட் ஆனது. அதோடு அந்த படத்தில் நடித்த நயன்தாரா-வையே காதலித்து திருமணம் செய்தார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அஜித் படத்தில் கமிட் ஆக இனி விக்னேஷ் சிவன் ரேஞ்ச் வேற தான் என்றனர்.

விக்னேஷ் சிவனுக்கு இதுவும் போச்சா, சினிமா வாழ்க்கையே கேள்விக்குறி | After Ajith Vignesh Shivan Pradeep Movie Droped

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே கைவிடப்பட்டு அஜித் விடா முயற்சி பக்கம் சென்றார். விக்கி ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு தாவினார்.

ஆனால், தற்போது இந்த படமே ட்ராப் ஆகிவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் கண்டிப்பாக விக்னேஷ் சிவன் திரைப்பயணம் கேள்விக்குறி தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.