ரெடியா? பிக்பாஸ் அல்டிமேட் 2- அட்டேட்!! பிக்பாஸ் ஜூலி பகிர்ந்த புகைப்படம்..
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு கடந்த ஜனவரி 19 ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 2
இதனையடுத்து அனைவரும் எதிர்ப்பார்த்தபடி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 2வும் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனோடு அப்படியே நிறுத்தப்பட்டது. கமல் ஹாசன் 4 வாரங்கள் தொகுத்து வழங்கி விலகியப்பின் சிம்பு அவருக்கு பதில் தொகுத்து வழங்கினார். டைட்டில் வின்னரை பாலாஜி முருகதாஸ் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிப்பரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 2வை யார் தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என்றும் நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். அதில் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1ல் கலந்து கொண்ட பிக்பாஸ் ஜூலியும், ஒரு பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Friends #BiggBoss ultimate varuthu.... Unga choice yaru vanthaa nalla content kedaikkum... Comment please...#BiggBossTamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #BiggBossTamil8Season pic.twitter.com/6QMv0Ae8VL
— Subha (@StarFanSubha) January 20, 2025