பிக்பாஸ் 8 முடிந்த கையோடு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்!! வீடியோ இதோ...
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது.
24 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8ல், டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசினை தட்டிச்சென்றார். பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்து தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அன்ஷிதா Jodi Are U Ready 2
என்னை காயப்படுத்தி அனுப்பிய ஒரு நபரின் வீட்டுக்கே சென்று, நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக கூறிவிட்டேன் என்றும் விஜய் டிவியில் புது பிராஜெக்ட்டில் இணைந்து ஷூட்டிங்கில் கலந்து வருவதாக அன்ஷிதா கூறியிருக்கிறார்.
அந்த பிராஜெக்ட் என்ன என்று அன்ஷிதா கூறவில்லை. அது, ஜோடி ஆர் யூ ரெடி 2 நிகழ்ச்சி தானாம். ஜோடி ஆர் யூ ரெடி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அன்ஷிதா நடனமாடவிருக்கிறார்.