விஜய் வர்மாவுடன் காதல் பிரேக்கப்!! கிரிக்கெட் வீரருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை தமன்னா..

Tamannaah
By Kathick Mar 19, 2025 12:30 PM GMT
Report

தமன்னா

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்ததை நாம் அறிவோம். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய காதல் தோல்வியடைந்துள்ளது.

ஆம், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் வர்மா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியது இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

விஜய் வர்மாவுடன் காதல் பிரேக்கப்!! கிரிக்கெட் வீரருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை தமன்னா.. | After Breakup Tamanna Says Mircales Not Happen

இந்த நிலையில், காதல் தோல்விக்கு பின் நடிகை தமன்னா, சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் காதலில் இருந்திருக்கிறார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம் ஒன்றில் ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் பிரேசில் நடிகையின் அறிமுகம் கிடைத்ததால் தமன்னாவை விராட் கழட்டிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.