சேலத்தில் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர்!! கடுமையாக விமர்சித்த பிரபலம்..
சேலத்தில் விஜய்
தவெக தலைவர் விஜய் சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று காலை பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறது.

அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்திலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த பிரச்சரத்தில் எதிர்பாரத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் சூரஜ் என்ற இளைஞர் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர்
முதலில் மூச்சுத்திணற ஏற்பட, உடனே வாரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு முதலுதவி கொடுத்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும், விஜய் பேசியதை வைத்து விமர்சித்து வருகிறார்கள்.
சேலம் பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினரையும் தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறுவார் என்று காட்டமாக விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், மதிய வெயிலில்.. பந்தல் போடாமல்.. மேலும் ஒரு உயிரிழப்பு. இவரது வீட்டாரையும் பனையூர் வரசொல்லி நஷ்ட ஈடு தருவார் போல என்று கலாய்த்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.