ஹைதராபாத்தில் 15 கோடியில் பங்களா வாங்கிய நாக சைதன்யா!! முன்னாள் மனைவியை பழிவாங்க போட்ட பிளான்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. ஜோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பிரபலமான நாக சைதன்யா தன்னுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகளான நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நாக சைதன்யா வேறொரு திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று டேட் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார்.
அதே பகுதியில் தான் நடிகை சமந்தாவும் வீடு வாங்கி குடியேறியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. முன்னாள் மனைவியை பழிவாங்க நாக சைதன்யா போட்ட பிளான் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
