விவாகரத்து வதந்திக்கு நடுவில் இப்படியொரு போட்டோஷூட்.. 41 வயதான நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்

Prasanna Sneha Gossip Today Divorce
By Jai Nov 19, 2022 03:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வட இந்திய பெண்ணாக 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சினேகா பிரசன்னாவை காதலித்து 2012ல் திருமணம் செய்தார்.

இரு குழந்தைகளுக்கு தாயாகி சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி குடும்பத்தை பார்த்து வந்தார். அதன்பின் மீண்டும் நடிக்க ரீஎண்ட்ரி கொடுத்த சினேகா குணச்சித்திர ரோலிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி சென்னை ஹைதராபாத் என்று பிஸியாகவும் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னாவை சினேகா விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது.

ஊடகங்களில் இந்த செய்தி வைலரானதை தொடர்ந்து அதற்காக முற்றுப்புள்ளி வைத்து சினேகா பிரசன்னாவும் கருத்துக்களை கூறி வந்தனர்.

41 வயதாகும் சினேகா க்யூட்டான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இன்னும் வயசே ஆகல என்று ரசிகர்கள் சினேகாவை பார்த்து வியந்து வருகிறார்கள்.