கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. அந்த ஒரே காரணத்திற்காக ஓகே சொன்னேன்!! நடிகை அபிராமி..
90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அபிராமி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் செட்டிலாகினார். விரும்மாண்டி படத்திற்கு பின் சினிமாவைவிட்டு விலகி திருமணம் செய்து கணவருடன் செட்டிலாகினார். அதற்கு காரணம் கமல் கொடுத்த டார்ச்சர் தான் என்று பல விமர்சகர்கள் கூறி வந்தனர்.
பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மகாராஜா என்ற டைட்டில் கொண்ட படத்தில் நடித்துள்ளார் அபிராமி.
சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அபிராமி தீவிரமான கண்களை தமிழ் சினிமாவில் கமலிடம் பார்த்தேன் என்றும் அதன்பின் உங்களிடம் பார்க்கிறேன் என்று விஜய் சேதுபதியை கூறினார்.
மெய் மறந்து அந்த கணகளை பார்த்ததாகவும் அபரிவிதமான திறமையும் நீங்கள் தேர்வு செய்யும் கதை ஏதாவது ஒரு காரணத்திற்காக நடிக்கிறீர்கள், அதனால் தான் உங்களை பிடிக்கிறது என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.
விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கதையை இயக்குனரிடம் கேட்கவில்லை விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற காரணம் தான் என்று மேடையில் கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.