மகாலட்சுமியை தொடர்ந்து சீரியல் நடிகைக்கு பிரச்சனை கொடுக்கும் ஈஸ்வர்.. கணவர் கூறிய உண்மை..
தமிழில் கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். 2017ல் இருந்து சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த திவ்யா ஏற்கனவே திருமணமாகி 5 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் சீரியல் நடிகர் அர்னவ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு இருவர் 5 வருடங்களாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வந்து வந்தனர். பின் அர்னவ் விருப்பத்தின் பேரில் முஸ்லின் முறைப்படியும் இந்து முறைப்படியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த திவ்யாவை மிரட்டியுள்ளார் அர்னவ். இதனிடையில் அர்னவ் சக நடிகையுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஷாக்காகி என்ன இது என்று கேட்டுள்ளார் திவ்யா.
இந்த சண்டை முற்றி நேற்று முன் தினம் திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், அர்னவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து திவ்யா கருவை கலைக்க நாடகமாடி வருகிறார் என்று கூறி வந்தார். அதே சமயம், நடிகர் ஈஸ்வர் தான் பின்னால் இருந்து உசுப்பேற்றி விருகிறார். எங்கள் ஒன்றரை ஆண்டுகளாக பிரச்சனையாக இருப்பதே ஈஸ்வர் தான் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நடிகர் ஈஸ்வர், நடிகை மகாலட்சுமியுடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீயும் புகார் அளித்திருந்தார்.