பல அவமானங்களை சந்தித்திருக்கிறேன்..இன்னும்!! நடிகர் ஷாருக்கான் ஓபன் டாக்..
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஷாருக்கான், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஷாருக்கான் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், வாழ்க்கையில் அவமானங்கள், கஷ்டங்கள், நஷடங்கள் சந்திக்காமல் யாரும் வெற்றியின் உச்சியை அடைந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையிலும் பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.
அவற்றில் சில இன்றும் ஆறாத காயங்களாக மனதில் இருக்கிறது. ஆனால் அந்த அவமாங்களே வெற்றிக்கான வெகுமதியாக மாறும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இக்கட்டான சூழலில் மனம் தளராமல் மீண்டும்
எழுந்து ஓட வேண்டும். தேடலும் முயற்சியும்
இருக்கும்வரை வெற்றியை நோக்கிய பயணமும்
தொடரும் என்று ஊக்களிக்கும் வகையில்
ஷாருக்கான் பேசியிருக்கிறார்.