திருமணமான கையோடு தாய்லாந்து ஹனிமூனுக்கு சென்ற பிரியா பவானி சங்கர்...
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் ராஜாவை நவம்பர் 11 ஆம்தேதி திருமணம் செய்த ஒரு வாரத்தில் கணவருடன் தாய்லாந்துக்கு பறந்துள்ளார் பிரியா பவானி.
பிரியா பவானி சங்கர்
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், ரவி தேஜா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான இருமுடி படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி, திடீரென நவம்பர் 11 ஆம் தேதி தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் ராஜாவை சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், சினிமா பிரபலங்களுக்கு கூட சொல்லாமல் திருமணம் செய்தது ஏன் என்ற பலரும் சோசியல் மீடியாவில் கேள்வியை எழுப்பினர்.
ஹனிமூன்
அதற்கு பிரியா, நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாக திருமணத்தை கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்தையும் நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
இதனையடுத்து திருமணமான கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.